Thu. Dec 19th, 2024

கருக்கா வினோத்துக்கு எதிராக மனு கொடுத்த காவல்துறை!

தமிழக பாஜக அலுவலக பெட்ரோல் குண்வீச்சு தாக்குதல் வழக்கில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக, நவம்பவர் 15ம் தேதிக்குள் கருக்கா வினோத் பதலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற கருக்கா வினோத், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். சமூகத்திற்கும், பொது மக்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் கருக்கா ஈடுபட்டுள்ளார் என்று அந்த மனுவில் காவல் துறை குறிப்பிட்டுள்ளது.