Mon. Jul 8th, 2024

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா!

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மீண்டும் மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை வழங்கினார்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், டாக்டர் அப்துல்கலாம் கலையரங்கத்தில் நடைபெற்ற பேரவை (2023-2024) தொடக்க விழாவினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மீண்டும் மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனில்
மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் “புதுமைப் பெண்”
திட்டம், உயர்நிலை அடைவதற்குரிய பயிற்சிகள் வழங்கும் “நான் முதல்வன்” திட்டம் போன்ற பல்வேறு உயர்கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வம் தூண்டப்பட்டு, அதிக அளவிலான மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.


மேலும் இக்கல்லூரியில் 2023-2024 -ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை தலைவர்கள், உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கணிதம், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்தும் இப்பேரவைக்கான தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கல்வி பயிலும் பொழுதே தலைமைத்துவம்,
ஒருமைப்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிட வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் உறுப்பினர்களின் பணிசார்ந்த உறுதி மொழியினை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வி சிறந்து விளங்கி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
நா.கவிதப்பிரியா, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கே.செல்வக்குமார், வட்டாட்சியர் கவியரசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை