‘எண் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு உழைக்கும் மகளிர்க்கு அழைப்பு விடுத்து அசத்தும் புதுக்கோட்டை நகர பாஜக !
மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், தாலிக்கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை
அழகிய தட்டில் வைத்து ‘எண் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு உழைக்கும் மகளிர்க்கு புதுக்கோட்டை நகர பாஜகவினர் அழைப்பு விடுத்தனர்.
‘எண் மண் என் மக்கள்’ யாத்திரை வரும் நவம்பர் 6ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.
என் மண் – என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க அழைக்கும் அழைப்பிதழை, உழைக்கும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கீழ 3ம் வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் பாஜக மாவட்ட பொதுசெயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யாத்திரை பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் தலைமையில் நகர செயலாளர்கள் லெட்சுமணன், சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது.
உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார்,அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் மனோகர்,ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ்,
சக்திகேந்திர கூடுதல் பொறுப்பாளர் கைலாஷ், நகர நிர்வாகிகள்
ஆனந்த்,செந்தில்குமார், ரங்கநாதன், இளங்கோ, சுப்பிரமணியன், கண்ணன், ராஜேந்திரன், ரஜினி, ரவி, சாய்லெட்சுமி, கிளைத் தலைவர்கள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை அழைக்கிறார் என்ற பதாதையுடன் புதுக்கோட்டை நகர வீதிகளில் பாஜக நிர்வாகிகள் மேளதாளத்துடன்
ஊர்வலமாக சென்று,வீடு தோறும் மங்களகரமான பொருட்களை வழங்கி, சொந்த குடும்ப விசேஷத்திற்கு அழைப்பது போன்ற நூதனமான இந்த அணுகுமுறையை பொதுமக்கள் வரவேற்று ரசித்தனர்.
அமானுல்லா புதுக்கோட்டை