தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளது – பாலச்சந்திரன் தகவல்!

வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பொய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 43% குறைந்துள்ளது. இத்தாண்டில் 171 மீ.மீ பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 98 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.
9வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை 6 மாவட்டங்களில் இயல்பாகவும், 16 மாவட்டங்களில் மிக குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.