Sun. Oct 6th, 2024

கொரோனா மாரடைப்புகள் – கடுமையாக உடற்பயிற்சியை செய்யாதீங்க : அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா!

கடுமையாக உடற்பயிற்சியை செய்ய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றால் அதிக பாதிப்பை அனுபவித்து குணமடைந்தவர்கள், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான வேலைகளை செய்வது, தொடர்ந்து உழைப்பது, கடுமையாக ஓடுவது, கடுமையாக உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

எனவே, மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க யாரும் கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.