Mon. Jul 8th, 2024

‘மார்க் ஆண்டனி’ வெற்றி : இயக்குநருக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர் வினோத் குமார்!

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியானது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையக்க, மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்தார்.

ஹீரோயினாக ரித்துவர்மா நடித்தார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளி வந்து 19 நாட்களில், உலக அளவில் ரூ.100 கோடியை வசூலை எட்டியுள்ளது.

இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால், வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படத்தின்
தயாரிப்பாளர் வினோத் குமார், ‘மார்க் ஆண்டனி’ வெற்றிக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை வழங்கினார்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.