கருக்கா வினோத்தை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி – சைதாப்பேட்டை நீதிமன்றம்
ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோம்பர் 25ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருக்கா வினோத்தை நவம்பர் 1ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.