கள்ளக்குறிச்சியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை!
கள்ளக்குறிச்சியில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி பைரவி நேற்று முன்தினம் விஷம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மாணவி மயங்கிய நிலையில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், இன்று பைரவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.