Thu. Dec 19th, 2024

ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

பெட்ரோல் வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் பொய் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் தரப்பு கூறுகையில், கருக்கா வினோத் சாலையில் தான் பெட்ரோல் குண்டு விசினான். ஆளுநர் மாளிகை மீது வீசவில்லை. பெட்ரோல் குண்டு வீச முயன்ற கருக்கா வினோத் போலீசாரால் தடுக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். நந்தனத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரை கருக்கா வினோத் நடந்தே வந்துள்ளான். ராஜ்பவன் வெளியே உள்ள சாலையில்தான் அச்சம்பவம் நடந்துள்ளது என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக, ராஜ்பவனில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது. ஆளுநர் பாஜககாரராக மாறியுள்ளார். ஆளுநர் மாளிகையும் பாஜக அலுவலகமாக மாறியுள்ளதுதான் வெட்கக்கேடு என்றார்.