Mon. Jul 8th, 2024

ரசிகர்களுக்கு Good News : லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி

நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து காவல் துறை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் –

200-300 கார்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி கிடையாது.

அனுமதித்த எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

நேரு விளையாட்டு அரங்கிலுள்ள இருக்கைகளுக்கு ஏற்றவாறு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும்.

லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.