Mon. Jul 8th, 2024

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைந்துள்தாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேவரை சாதியத் தலைவராக யாரும் பிரித்துப் பார்க்கவில்லை. தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக பார்த்தவர் தேவர். மாபெரும் தியாகியாக கொண்டாடப்படுவர் முத்துராமலிங்க தேவர்.

முத்துராமலிங்க தேவரை கொண்டாடுவது என்பது இயற்கையானது. 234 தொகுதிகளிலும் அதிமுக கவனம் செலுத்தி வருகிறது. எந்த தொகுதிக்கும் தனியாக முக்கியத்துவம் தரப்படவில்லை.

பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு இனி இழப்பு, சேதாரம் என்பது கிடையாது.

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளது என்பது உண்மைதான். அதற்கான காரணங்கள் கண்டுபிடிப்பட்டு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலின் அதிமுக வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கையில் களமிறங்கி இருக்கிறோம் என்றார்.