பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா இன்று நடைபெற்று வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்,
மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி மற்றும் 61ஆவது குரு பூஜையையொட்டி பசும்பொன் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார், ஆளில்லாத விமானம், உயர் கோபுரங்கள், ரோந்து வாகனங்கள் என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.