தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் நிறுவப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மண்டபம் அமைக்கப்படும்.
மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12.54 லட்சம் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.