ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைப்பு – அமைச்சர் சிவசங்கர்!
ஆம்னி பேருந்து கட்டணம் 30% குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று தீபாவளி பண்டிகை கால ஆம்னி பேருந்து கட்டணத்தில் மேலும் 5% கட்டணத்தை குறைக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடந்தாண்டு 25% கட்டணம் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு மேலும் 5% என மொத்தம் 30% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.