இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து தென் சென்னை மாவட்ட செயலாளர் சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.