ஆவடி அருகே வாலிபர்கள் அரிவாள் வெட்டு | வீடியோ வெளியாகியுள்ளது
ஆவடி அருகே கேஸ் பங்கில் பணியாற்றும் கல்லூரி மாணவரை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டும் கட்சி வெளியாகியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் சங்கர்.இவரது மகன் (புருஷோத்தமன்/17) அம்பத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு முடிந்து மாலை நேரத்தில், பட்டாபிராமில் உள்ள தனியார் எல்.பி.ஜி கேஸ் நிரப்பும் பங்கில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் இரவு பணியில் இருந்த மாணவரை ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் வரிசையில் நிற்காமல் உடனடியாக கேஸ் நிரப்புமாறு நிர்பந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவர் அவர்களை வரிசையில் வருமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவர் தலையில் வெட்டியதோடு பங்கில் உள்ள கேஸ் நிரப்பும் இயந்திரத்தையும் அடித்து உடைத்துள்ளனர்.பின்னர் அங்கிருந்து அட்டோவில் தப்பி சென்றனர்.மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாணவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டாபிராம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர