ஆளுநரின் இந்த பொய் பேச்சு எங்களுக்கு நல்லதுதான் – திண்டுக்கல் லியோனி
ஆளுநரின் இந்த பொய் பேச்சு எங்களுக்கு நல்லதுதான் என்று பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
பாடப்புத்தகங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் பேசியது ஆதாரமற்றது.
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகள் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லும்போது, மக்களிடம் உண்மையை சொல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அது ஒரு வகையில் நல்லதுதான் என்று தெரிவித்துள்ளார்.