Thu. Dec 19th, 2024

இன்று அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

ஐப்பசி மாதம் சனிக்கிழமையான இன்று (28.10.2023) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

நண்பர்களுக்கிடையே பேசும் போது நிதானம் வேண்டும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். பிறரின் பணிகளைக் குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப விவகாரங்கள் பற்றி பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கை, கால்களில் ஒருவிதமான வலிகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

மிதுனம்

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர் பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். முயற்சி ஈடேறும் நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். விருப்பமான விஷயங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

துலாம்

சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள்.