இந்தியாவில் இன்று சந்திர கிரகணம்! எந்த நேரம்ன்னு தெரியுமா?

2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.
இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் அதிகாலை 2.24 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம்.
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் 8 மணி நேரம் தோஷ காலமாக கருதப்படுகிறது
இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம்
பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சமயபுரத்தில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.