வீடியோ வெளியிட்டு ராஜ்பவனின் பொய்களை அம்பலப்படுத்திய காவல்துறை!
ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாகவும், ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்படுத்தப்பட்டதாகவும், ராஜ்பவன் ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடித்ததாகவும், தருமபுரம் சென்றபோது, கற்களாலும், தடியாலும் தாக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை வீடியோவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ –