Fri. Dec 20th, 2024

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள் – குடியரசு தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு!

2 நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு நேற்று வந்தார்.

நேற்று விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர், ஆளுநர் வரவேற்றனர்.

இந்நிலையில், இன்று குடியரசுத்தலைவரை சந்தித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தார்.

அதில், ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காக்க வேண்டும்.

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை, பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு எதிரானது. முன்பு பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடந்த சேர்க்கையால் மாநிலத்தில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.

நீட் விலக்கு சட்ட முன்வடிவு ஆளுநரால் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.