ஆளுநரை மாற்ற வேண்டாம்… – மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!
தமிழ்நாட்டில் ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
‘திராவிடம் என்றால் என்னவென்று கேட்க வைத்திருப்பது தான் திராவிடம். இருந்தாலும் அவரே ஆளுநராக தொடர்ந்து இருக்க வேண்டும். அது நம் பிரச்சாரத்துக்கு வலுவாக இருக்கும். தயவு செய்து இங்கிருக்கும் ஆளுநரை என்றைக்கும் மாற்ற வேண்டாம் என்று பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரையிலாவது அவரே இருக்கட்டும். எங்களுக்கு அது சௌகரியம் தான் என்று தெரிவித்தார்.