Fri. Dec 20th, 2024

ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு : வினோத்தை ஜாமினில் எடுத்த பாஜக வழக்கறிஞர்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக, பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி சுருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், 2 பெட்ரோல் கண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றதாகவும், ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலில் பலத்த சேதம் அடைந்ததாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்தது.

இது குறித்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், தாக்குதல் நடத்த வந்தவர்கள் ஒரு பெட்ரோல் பாட்டிலை வீசினார். பாட்டில் ஆளுநர் மாளிகை மீது விழவில்லை. ஆளுநர் மாளிகை கேட் அருகே உள்ள சாலை தடுப்புகள் மீது தான் விழுந்தது. எந்த சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு விசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் இருந்து (பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு) திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் ஜாமினில் வெளியே எடுத்ததாக திமுக ஐ.டி.பிரிவு குற்றச்சாட்டியுள்ளது.