“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்பு!
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி திருமயம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கலந்துரையாடினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா
திருமயம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை
மேம்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வது மட்டுமின்றி, சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அறிவை பெருக்கிக்கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
இவ்வாறு படிப்பதன் மூலம் நீங்கள் இலக்காக வைத்திருக்கும் உயர்ந்த இடத்தினை அடைய முடியும். எனவே மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி உயர்நிலையினை
அடைவதற்கு னது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.நா.கவிதப்பிரியா, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அமானுல்லா புதுக்கோட்டை