Mon. Jul 8th, 2024

உதவிகளை தங்குதடையின்றி காசா பகுதிக்குள் அனுப்ப அமெரிக்கா ஆதரவு அளிக்கும் – ஜோ பைடன்

கடந்த இரு வாரங்களுக்கு மேல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை மீட்பது குறித்தும் இருநாட்டு தலைவர்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, உரிமைகளை காக்க இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளை தங்குதடையின்றி காசா பகுதிக்குள் அனுப்ப அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.