Mon. Jul 8th, 2024

“பெட்ரோல் குண்டு வீச்சு – NIA-வுக்கு மாற்ற வேண்டும்” – வானதி சீனிவாசன்

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவம் NIA-வுக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய துடிப்பதா?

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை என்.ஐ.ஏ. அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

திமுக அரசின் செயல்பாடுகள், இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், பகிர்ந்தால் வார இறுதி நாட்களில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை.

ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.