தீபிகா மற்றும் ரன்வீர் திருமண வீடியோ வைரல் – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்!
இந்திய பாலிவுட் திரையுலகத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார்.
கடந்த 2007ம் ஆண்டு ‘ஃபரா கானின் ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் பிலிம்பேர் விருதையும் வென்றார்.
இவர் பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகரான ரன்வீர் சிங் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக ஒருவரையொடுத்து காதலித்து வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், ‘காஃபி வித் கரண் 8’ நிகழ்ச்சியில் தீபிகா மற்றும் ரன்வீர் விலைமதிப்பற்ற திருமண வீடியோவை வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.