காரை மடக்கி சேதப்படுத்திய காட்டு யானை – பதற வைக்கும் வீடியோ!
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை கீழ்தட்டுப்பள்ளம் பகுதியில் திடீரென்று காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கிய காட்டு யானை காரை சேதப்படுத்தியது.
நல்லவேளையாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.