தகுதியான பெண் ஓதுவார்களாக நியமித்தால் ஆட்சேபனை இல்லை – பரமாச்சாரியார் பேட்டி
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை 27வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தகுதியான பெண் ஓதுவார்களை நியமித்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆதீனத்தில் 5 ஆண்டுகள் முறையாக பயின்று இருக்க வேண்டும். செயலி மூலம் பன்னிரு திருமுறைகள் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது சிறப்புக்குரியது என்றார்.