Sun. Oct 6th, 2024

சுதந்திர போராட்ட வீரர்களை சாதிக்குள் அடக்குகிறது திமுக – அண்ணாமலை பேட்டி

சுதந்திர போராட்ட வீரர்களை சாதிக்குள் திமுக அடக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பெயர்கள் புத்தகங்களில் இருக்கிறது என்று திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டை சேர்ந்த 6 ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்களின் விவரம் ஆளுநரிடம் உள்ளது. நினைவு மண்டபம் வைப்பதால் எந்த பயனும் இல்லை.

சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதிக்குள் திமுக அடக்குகிறது என்றார்.