Mon. Jul 8th, 2024

வாங்க லோகேஸ்.. பாலஸ்தீனத்திற்கு போகலாம் – மன்சூர் அலிகான் அழைப்பு!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.20,000 கோடி ஆட்டய போட்டுறான் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

ரூ.500 கோடி முதல் போட்டு, லட்சம் பேருக்கு வேலை கொடுத்து, ஒன்றரை வருடம் பாடுபட்டு ரூ.1000 கோடி வசூலுக்கு உழைக்கிறோம்.

ஆனா, அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.20,000 கோடி ஆட்டய போட்டுறான்.

லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல.

அதனை விட்டுவிட்டு ‘தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு’. இல்லைன்னா வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்.

500 மிலிட்டரி டேங்கர், 500 Armed air craft எடுத்துக்கொண்டு வாருங்கள், போருக்கு போய், எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம். அப்பாவிங்க சாகுறாங்க.

சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு, வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ் என்று தெரிவித்துள்ளார்.