உயிருக்கு போராடிய குரங்கிற்கு உயிர் கொடுத்த இளைஞர்!
உயிருக்கு போராடிய குரங்கிற்கு ஒரு இளைஞர் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு உயிருக்கு போராடியுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த நிதிஷ் என்ற இளைஞர் அந்த குரங்கின் வாயில், தன் வாயை வைத்து மூச்சுக்காற்று கொடுத்து அந்த குரங்கை காப்பாற்றியுள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞனை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.