Mon. Jul 8th, 2024

காசாவில் மருத்துவ சேவை முடங்கியது – பரிதவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் மூண்டு வருகிறது. இப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் இப்போரை நிறுத்தக்கோரி கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், தொடரும் போர் காரணமாக காசாவுக்கு எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. எரிபொருள் கிடைக்காததால் காசாவில் உள்ள 13 மருத்துவமனைகள், 32 சுகாதார மையங்களில் சேவை முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 65 மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களில் 35 குழந்தைகள் உட்பட 704 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.