செங்கல்பட்டு அருகே ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
செங்கல்பட்டு அருகே ஊரப்பாக்கத்தில் ரயில் மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத்திறன் கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
ரயில் மோதிய விபத்தில் வாய்பேச முடியாத, செவி திறன் செயல்பாடு, பார்வையற்ற சிறுவர்கள் சுரேஷ், ரவி, மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரிழந்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.