மகளிர் மசோதா – காதில் தேன் ஊற்றும் வேலை – சீமான் காட்டம்!

மகளிர் மசோதா காதில் தேன் ஊற்றும் வேலை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், செயல்வடிவம் பெறாத மகளிர் மசோதா, காதில் தேன் ஊற்றும் வேலை. மகளிர் மசோதா அறிவிப்பு பாஜகவின் வெறும் பேச்சுதான். திமுகவின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் ஒரு அரசியல் நாடகம். நீட் விலக்குகாக கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் வந்துவிடும். மத்திய அரசும் சரியில்லை. அதனை குறைகூறும் மாநில அரசும் சரியில்லை என்றார்.