Thu. Dec 19th, 2024

உங்கள் அன்புக்கு நன்றி கேரளா – இயக்குநர் லோகேஷ்

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் ‘லியோ’ படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் மாஸ் ஹிட்டடித்துள்ளது. விஜய் ரசிகர்கள் ‘லியோ’ படத்தை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்திற்கு இணையாக கேரளா விஜய் ரசிகர்கள் ‘லியோ’ படத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டாடினார்கள்.

தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போது ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கேரளா சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உங்கள் அன்புக்கு நன்றி கேரளா.. பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நன்றியுடன்.

கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால், மற்ற இரண்டு இடங்களுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் கேரளாவில் சந்திக்க நிச்சயமாக வருவேன். அதுவரை இதே அன்புடன் சிம்ம ராசியை ரசித்துக்கொண்டே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.