வேலைநிறுத்தம் கைவிடப்படும் – அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை!
வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிக வசூல் காரணமாக, ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் அறிவிப்பால் விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டு திரும்ப திட்டமிட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கச் செயலாளர் மாறன் பேசுகையில், ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். ஸ்ட்ரைக் அறிவித்த தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்துக்கு 5% பேருந்துகளே உள்ளன. ஆம்னி பேருந்துகளில் பயணிக்க 90% பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றார்.
இதற்கிடையில், ஆம்னி பேருந்துகள் சங்கத்தினருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் ஸ்டிரைக் கைவிடப்படும் என்றும், கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.