நாங்கள் சிறப்பாக ஆடவில்லை… – கேப்டன் பாபர் அசாம் வருத்தம்!
நாங்கள் சிறப்பாக ஆடவில்லை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை, பாகிஸ்தான் அணி எதிர் கொண்டது.
இப்போட்டியின் முடிவில், ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசுகையில்,
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தோல்வி எங்களுக்கு வலிக்கிறது. பந்து வீச்சில் நன்றாக தொடங்கினாலும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தாத காரணத்தால் தொல்வியை தழுவினோம். மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆப்கான் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.