அதிக கட்டணம் வசூல் செய்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் – அதிகாரிகள் விளக்கம்!
ஆம்னி பேருந்துகள் பறிமுதல் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஆம்னி பேருந்துகள், வெளி மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயக்கப்படுகின்றன.
ஆர்.டி.ஒ.மூலம் பேருந்தகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு, கட்டண உயர்வு மட்டுமே காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.