2 அமெரிக்கர்களை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது!
பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த 2 அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கம், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காஸா போரில் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட, ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய மகள், நடாலி ரானன் ஆகிய 2 அமெரிக்க பெண்மணிகள் ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ளது.
ஜுடித்துக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மனிதநேய அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகத் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 200 பேரை ஹமாஸ் அமைப்பு, பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.