அரபிக் கடலில் உருவானது தேஜ் புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தேஜ் புயல் தீவிரமாக வலுப்பெற உள்ளது.
வரும் 25ம் தேதி அதிகாலை ஓமன்-ஏமன் இடையே இந்த புயல் கரையைக் கடக்க உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.