Sun. Oct 6th, 2024

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி – இஸ்ரோ சாதனை

இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், “மிஷன் ககன்யான் விமானம் TV-D1 வரும் அக்டோபர் 21, 2023 காலை 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-SHARலிருந்து சோதனை ஓட்டம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு அனுப்பப்பட இருந்த இந்த சோதனை ஒட்டம் நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரகமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் மூலம் மாதிரி விண்கலம் விண்ணில் 17 கி.மீ தொலைவுக்கு ஏவப்பட்டு, பின்னர் பாராசூட் மூலமாக பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.