அதிகமாக சொத்து குவித்த வழக்கு – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு பேட்டி!
இன்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், “எப்ஐஆரில் தவறு இருப்பதால் விசாரணை நடத்த வேண்டாம் என்று யாரோ ஒருவர் என்னை அழைத்து சொன்னார்கள். எனக்கு எதிராக, எஃப்.ஐ.ஆரில் தவறானவை உள்ளன, எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் சரியாக இல்லை. எங்கள் வழக்கறிஞர்கள் அதை கவனிப்பார்கள் என்றார்.