Sun. Oct 6th, 2024

விபத்தில்லாமல் அரசு பேருந்து இயக்கிய 23 அரசு பேருந்து ஓட்டுநருக்கு விருது வழங்கி கவுரவிப்பு!

விபத்தில்லாமல் அரசு பேருந்து இயக்கிய 23 அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து விபத்தில்லா 23அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கும் முகாம் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா முஹம்மது தலைமையில் அரசு போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பணிமனை வளாகத்தில் நடைபெற்றது

முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கருணைச் செல்வி வரவேற்றார் ரோட்டரி பிரார்த்தனையை புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன் வாசித்தார் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவல நேர்முக உதவியாளர் நடராஜன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் இப்ராஹிம் பாபு, சேட் என்ற அப்துல் ரகுமான், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். சர்க்கரை நோய் மற்றும் பாத பிரச்சனை சிறப்பு மருத்துவர் துரை நாகரத்தினம் முகாம் மருத்துவராக கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகர காவல் துணை கண்காணிப்பாளர் G.ராகவி கலந்து கொண்டு விபத்தில்லா 23அரசு பேருந்து இயக்கிய ஓட்டுநர்களுக்கு மெடல் ,சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவம் செய்தார் நிறைவாக புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்க செயலாளர் சுகன்யா நன்றி கூறினார் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் சங்கர், ஜான்சி ராணி ஆரவாமுதன், ஓம் ராஜ் பாரூக் ஜெய்லானி, ராமதாஸ், சங்கீதா, சலோமிலியோ,
சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். முருகேசன் திட்ட இயக்குனர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மகாராணி ரோட்டரி சங்க செயலாளர் சுகன்யா நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அமானுல்லா புதுக்கோட்டை