லியோ படத்தைப் பார்க்க வந்த லோகேஷ், அனிருத்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘லியோ’ படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.
இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், இன்று (அக்.19) காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது.
இந்நிலையில், லியோ படத்தைப் பார்க்க இயக்குநர் லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் திரையரங்கிற்கு வந்தனர்.
அவர்களை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து, ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.