Mon. Jul 8th, 2024

‘லியோ’ பட முதல் காட்சியில் நடந்த திருமண நிச்சயம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘லியோ’ படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.

இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

இப்படத்துக்கு மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், இன்று (அக்.19) காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது.

புதுக்கோட்டை திரையரங்கில் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியின்போது ஒரு ஜோடி மோதிரம் மாற்றிக்கொண்டு திரையரங்கிலேயே திருமண நிச்சயம் செய்து கொண்டனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.