மக்களை பாதுகாக்க நீங்கள் உழைத்தால் ஆதரவு கொடுப்போம் – இஸ்ரேலில் அதிபர் பைடன் பேச்சு!
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கு கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனை மீது நேற்று இரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் 500 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்தார்.
அப்போது, நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் பேசுகையில், “உங்கள் மக்களைப் பாதுகாக்க நீங்கள் உழைக்கும்போது நாங்கள் இஸ்ரேலின் ஆதரவைத் தொடர்வோம். அப்பாவிப் பொதுமக்களுக்கு மேலும் சோகத்தைத் தடுக்க நாங்கள் உங்களுடன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.