Fri. Dec 20th, 2024

தன்னை பார்க்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சந்தோஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தன்னை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட சிறுவன் சந்தோஷை “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்ட ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் நேரில் சந்தித்து ‘திருக்குறள் உரை’ புத்தகத்தை வழங்கினார்.

இதனால், அந்தச் சிறுவன் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து சந்தோஷ் கூறுகையில், எனக்கு ரொம்ப நாளாகவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிளை பார்க்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிள் எனக்கு , அவர் கையெழுத்துப் போட்டு திருக்குறள் புத்தகம் கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றார்.