Mon. Jul 8th, 2024

லியோ டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை – வெற்றி திரையரங்கம் தகவல்!

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. நாளை திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகிறது. காலை 9 மணியிலிருந்து திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு ஏற்கெனவே தொடங்கியதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணியிலிருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் வெளியிட்டுள்ள தகவலில், லியோ திரைப்படம் திரையிடப்படுவதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாததால் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்றும், இரவு முன்பதிவு தொடங்கினாலும் ஆன்லைனில் மட்டுமே இருக்கும் என்பதால் இன்று திரையரங்கு வளாகத்திற்குள் வருவதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெற்றி திரையரங்கம் தெரிவித்துள்ளது.