உயிரை காவு வாங்கிய சிவகாசி பட்டாசு விபத்து – 3 பேர் அதிரடி கைது!
விருதுநகர், சிவகாசி அருகே 2 இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில்
ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
கிச்சநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் அழகாபுரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.